fbpx

நாங்கள் என்ன தகவல்களைச் செயலாக்கம் செய்கிறோம்?

ஒரு நோயாளி மேக்ஸ் ஆக்சஸ் சொல்யூசன்ஸ் (MAS) திட்டத்தில் பங்கேற்கும் போது, நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறோம், தக்க வைத்துக்கொள்கிறோம் மற்றும் செயலாக்கம் செய்கிறோம் (இவை ஒட்டுமொத்தமாகசெயலாக்கம்எனப்படுகிறது):

  • உங்களுடைய பெயர்;
  • உங்கள் பாலினம்;
  • உங்கள் பிறந்த தேதி;
  • உங்களுடைய தொடர்பு எண்(கள்);
  • உங்களுடைய மின்னஞ்சல் முகவரி;
  • உங்களுடைய கடித முகவரி;
  • நீங்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை மற்றும் மருத்துவர் விவரங்கள்;
  • உங்களுடைய வருமானம் அல்லது நிதி நிலைமை (பொருந்தும் பட்சத்தில்); மற்றும்
  • உங்களுக்குப் பராமரிப்பு அளிப்பவரைத் தொடர்பு கொள்வதற்கான தகவல்கள் (பொருந்தும் பட்சத்தில்).

(இவை ஒட்டுமொத்தமாக உங்களுடையதனிப்பட்ட தரவுகள்எனப்படுகின்றன)

போதுமான ஆதரவையும், பராமரிப்பையும் நாங்கள் வழங்குவதற்கு, கீழேயுள்ள முக்கியமான தனிப்பட்ட தரவுகளையும் கூட நாங்கள் செயலாக்கம் செய்வோம்:

  • உங்களுடைய நோய் கண்டறிதல்;
  • உங்களுடைய நோய் கண்டறியப்பட்ட தேதி;
  • நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் சிகிச்சை;
  • உங்களுடைய உங்களுடைய PCR பரிசோதனை முடிவுகள் மற்றும் தேதிகள் (பொருந்தும் பட்சத்தில்).

(இவை ஒட்டுமொத்தமாக உங்களுடையமுக்கியமான தனிப்பட்ட தரவுகள்எனப்படுகின்றன)

உங்களுடைய தனிப்பட்ட தரவுகளையும், முக்கியமான தனிப்பட்ட தரவுகளையும் நாங்கள் எப்படி செயலாக்கம் செய்கிறோம் மற்றும் ஏன் செயலாக்கம் செய்கிறோம்?

எங்களுடைய MAS திட்டங்கள் ஒன்றில் ஒரு நோயாளியாகப் பங்கேற்க நீங்கள் விண்ணப்பிக்கும் போது உங்களுடைய தனிப்பட்ட தரவுகளையும், உங்களுடைய முக்கியமான தனிப்பட்ட தரவுகளையும் நாங்கள் உங்களிடமிருந்து நேரடியாகவோ, உங்களுக்கு பராமரிப்பு அளிப்பவரிடமிருந்தோ மற்றும்/அல்லது உங்கள் மருத்துவரிடமிருந்தோ சேகரிக்கிறோம். நாங்கள் கீழ்க்கண்ட காரணங்களுக்காக உங்களுடைய தனிப்பட்ட தரவுகளையும், முக்கியமான தனிப்பட்ட தரவுகளையும் செயலாக்கம் செய்கிறோம்:

  • உங்களை அடையாளம் காண்பதற்காக;
  • உங்களோடு தகவல் தொடர்பு கொள்வதற்காக;
  • நோயாளிக்கான ஆதரவு மற்றும் பராமரிப்பை உங்களுக்கு அளிப்பதற்காக;
  • உங்களுடைய நோய் அல்லது சிகிச்சை தொடர்பான தகவல்களை உங்களுக்கு அளிப்பதற்காக;
  • எந்தவொரு சட்டம் அல்லது விதிமுறைகளின் கீழ் வரும் எங்களுடைய கடமைகளின் படி நாங்கள் செயல்படுவதற்காக;
  • திட்டங்களின் நிர்வாகம் மற்றும் மேலாண்மை தொடர்பான வேறு ஏதேனும் நோக்கங்களுக்காக.

(இவை ஒட்டுமொத்தமாக, “நோக்கங்கள்எனப்படுகின்றன). 

பிரசுரங்களுக்கு நாங்கள் உங்கள் தரவுகளை ஓர் ஒட்டுமொத்த அளவிலும் மற்றும் அடையாளம் காண இயலாத முறையிலும் பயன்படுத்தக்கூடும். உங்களை அடையாளப்படுத்தக்கூடிய (.ம். உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி) எந்தவொரு தரவும் அகற்றப்படும். இதன்மூலம் எவர் ஒருவரும் உங்கள் தரவுகளோடு உங்களைத் தொடர்புப்படுத்த இயலாது.

உங்களுடைய தனிப்பட்ட தரவுகளையும், முக்கியமான தனிப்பட்ட தரவுகளையும் யாருக்கு நாங்கள் வெளிப்படுத்துவோம்?

பின்வருபவர்களுக்கு நாங்கள் உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை மற்றும்/அல்லது முக்கியமான தனிப்பட்ட தரவுகளை வெளிப்படுத்தக்கூடும்:

  • மேக்ஸ் பவுண்டேஷன் உடன் இருக்கும் நிறுவனங்கள்; மற்றும்
  • சட்டபடியான கடமையாக இருக்கும்பட்சத்தில் சட்ட அமலாக்க முகமை அல்லது அரசு முகமை.

உங்களுடைய தனிப்பட்ட தரவுகளும், முக்கியமான தனிப்பட்ட தரவுகளும் யுனைட்டட் ஸ்டேட்ஸில் உள்ள எங்களுடைய பாதுகாக்கப்பட்ட, வலைத்தளம் அடிப்படையிலான தரவுத்தளத்திலும் சேமிக்கப்படும்.

உங்களுடைய ஒப்புதல் இல்லாமல் உங்களுடைய தனிப்பட்ட தரவுகளையும், முக்கியமான தனிப்பட்ட தரவுகளையும் எந்தப் பிற மூன்றாம் தரப்பினருக்கும் நாங்கள் வெளிப்படுத்த மாட்டோம். நாங்கள் உங்களுடைய தனிப்பட்ட தரவுகளையும் மற்றும்/அல்லது முக்கியமான தனிப்பட்ட தரவுகளையும் கூட பாதுகாப்போம் மற்றும் அவை பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்வோம்.

உங்களுடைய தனிப்பட்ட தரவுகளையும், முக்கியமான தனிப்பட்ட தரவுகளையும் செயலாக்கம் செய்ய நீங்கள் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் என்ன பின்விளைவுகள் ஏற்படும்?

இந்தத் தனிப்பட்ட தரவுக்கான அறிவிப்பின் கீழ் உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் மற்றும் முக்கியமான தனிப்பட்ட தரவுகள் ஆகியவற்றை செயலாக்கம் செய்ய நீங்கள் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில், உங்களால் மேக்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் திட்டங்களில் பங்கேற்க இயலாது.

தரவுப் பாதுகாப்பு தொடர்பான உங்கள் உரிமைகள்:

தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பின்வருபவை உள்ளிட்ட உரிமைகள் உங்களுக்கு உள்ளன:

  • தகவலளிக்கப்படுவதற்கான உங்கள் உரிமைஉங்களுடைய எந்தத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன, அவை எப்படி பயன்படுத்தப்படுகின்றன, அவை எவ்வளவு காலம் தக்க வைத்திருக்கப்படுகின்றன மற்றும் ஏதேனும் மூன்றாம் தரப்புடன் அவை பகிர்ந்துகொள்ளப்படுமா என்பது குறித்த தகவல்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்படுவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.
  • தகவல்களை அணுகுவதற்கான உங்கள் உரிமைஉங்களுடைய தனிப்பட்ட தகவல்களின் ஒரு நகலைக் கோருவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.
  • திருத்தம் செய்வதற்கான உங்கள் உரிமைதுல்லியமற்றது அல்லது முழுமையற்றது என நீங்கள் எண்ணும் தகவல்களைத் திருத்தம் செய்யுமாறு (சரிசெய்யுமாறு) எங்களைக் கேட்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.  
  • அழிப்பதற்கான உங்கள் உரிமைசிலசூழ்நிலைகளில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை அழிக்க வேண்டும் என எங்களைக் கேட்பதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.
  • செயலாக்கம் செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கான உங்கள் உரிமை சில சூழ்நிலைகளில் உங்களுடைய தகவல்களைச் செயலாக்கம் செய்வதைக் கட்டுப்படுத்துமாறு எங்களிடம் கேட்பதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.
  • செயலாக்கம் செய்வதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்கான உங்கள் உரிமைசில சூழ்நிலைகளில் உங்களுடைய தனிப்பட்ட தரவுகளின் செயலாக்கத்திற்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.
  • தரவுகளின் பெயர்வுக்கான உங்கள் உரிமைசில சூழ்நிலைகளில் நீங்கள் எங்களுக்கு அளித்த தகவல்களை மற்றொரு நிறுவனத்திற்கோ அல்லது உங்களுக்கோ நாங்கள் மாற்றம் செய்வதை கேள்வி கேட்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.
  • விதிமீறல் குறித்த அறிவிப்பைப் பெறுவதற்கான உங்கள் உரிமைஉங்களுடைய பாதுகாக்கப்படாத உடல்நலம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் விதிமீறலுக்கு ஆட்பட்டால் அது குறித்து உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படுவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.

உங்களுடைய உரிமைகளைப் பெற நீங்கள் எந்த விதக் கட்டணமும் செலுத்த தேவையில்லை. நீங்கள் ஒரு கோரிக்கையை அளிக்கும் பட்சத்தில், உங்களுக்குப் பதில் அளிக்க எங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் உண்டு.

நீங்கள் ஒரு கோரிக்கையை அளிக்க விரும்பினால், தயவுசெய்து எங்களைப் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்:

The Max Foundation
1448 NW Market St.
Suite 500
Seattle, WA, 98107
+1 (206) 778-8660
info@themaxfoundation.org